• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி

Byகுமார்

Sep 21, 2021

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) மற்றும் காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்) ஆகிய நான்கு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கிராம சபைக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்து. தற்போது நிலையில் தொற்று கட்டுப்பட்டுக்குள் இருப்பதால் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நாளன்று திறந்தவெளியில் கூட்டம் நடைபெறுவதையும், கொரோனா தடுப்பு விதி பின்பற்றப்படுவதையும் உறுதி செய்யவேண்டும் எனவும், கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்கவேண்டும் எனவும் தமிழக அரசு கூறியிருக்கிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் கிராம சபை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் பொறுப்பற்ற பிறகு நடைபெறும் முதல் முறையாக கிராம சபை இது என்பது குறிப்பிடத்தக்கது.