



சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் கலைஞர் கனவு இல்ல திட்ட ஆணைகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார் 2030ம் ஆண்டிற்குள் 8 லட்சம் பேருக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உறுதியளித்துள்ளார்…..பாஜக அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு அமைச்சர் கொடுத்த ரியாக்சன்…

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 201 பயனாளிகளுக்கு
வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 2030ம் ஆண்டிற்குள் 8 லட்சம் பேருக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர்,

விருதுநகர் மாவட்டத்தில் 6 கோடியில் 1900 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டித்தர உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் கூடுதல் வீடுகள் கட்டித்தர தயாராக உள்ள நிலையில், அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதி வாய்ந்த பயனாளிகளை அதிகளவில் தேர்வு செய்ய அறிவுறுத்தியுள்ளதாகவும், தமிழகத்தில் குடிசை வீடுகளே இருக்க கூடாது என்பதற்காக போராடி வருகிறோம் என்றார்.
பாஜக அதிமுக கூட்டணியை கண்டு திமுக அஞ்சியுள்ளதாக அதிமுகவினர் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு, எனக்கு நிறைய வேலைகள் உள்ளது என தெரிவித்தபடி பதில் அளிக்காமல் நழுவி சென்றார்.

