


விருதுநகர் மதுரை சாலையில் உள்ள கே.வி.எஸ் தனியார் பள்ளி மைதானத்தில் கோடை விடுமுறை மற்றும் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி 77-வது பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.

பொருட்காட்சியை காண விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவர்களது குழந்தைகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று இரவு பொருட்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த ராட்டினத்தில் அமர்ந்திருந்த இளம் பெண் ஒருவர் திடீரென தவறி கீழே விழுந்ததில் அப்பெண்ணிற்கு காயம் ஏற்பட்டது.
உடனடியாக தகவல் அறிந்து அங்கு விரைந்த 108 ஆம்புலன்ஸ் மூலமாக காயமடைந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

