• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

செயற்கை கோள் உருவாக்கும் முதல் பள்ளி

ByN.Ravi

Oct 12, 2024

மதுரை சோழவந்தான் அருகே நகரியில் அமைந்துள்ள கல்வி சர்வதேச கல்விக் குழுமம் சிறிய செயற்கைக் கோள்கள் பெரிய பயன்பாடுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு மற்றும் இந்தியன் டெக்னாலஜி காங்கிரஸ் அசோசியேசன்(ஐ.டி.சி.ஏ) மற்றும் மாணவர்கள் பங்களிப்புடன் கூடிய 75 செயற்கைக் கோள் திட்டம் மற்றும் கல்வி செயற்கை கோள் திட்டம் ஆகியவற்றின் தொடக்க விழா நடைபெற்றது.
இதில், கலந்து கொண்டு கல்வி குழுமத்தின் தலைவர் எஸ்.செந்ததில் குமார் பேசுகையில்..,
தங்களது கல்வி குழுமத்தில் பயிலும் மாணவர்களில் விண்வெளித்துறையில் ஆர்வமும் சிறப்பாற்றலும் பெற்ற மாணவர்களை தேர்வு செய்து தினமும் காலையில் வழக்கமான கல்வி பாடத்திட்டமும் மதியத்திற்கு பின்னர் அவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சி திட்டம் தொடர்பான செயல்முறைகளும் கற்பிக்கப்படவுள்ளது.
எங்களது கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் விண்வெளி போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக தைவான், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று தங்களது விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான தங்களது ஆற்றலை வெளிப்படுத்துவார்கள் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் 75 மாணவர்கள் செயற்கைக் கோள்கள் திட்டத்தின் திட்ட இயக்குனர் கே. பாலகிருஷ;ணன் கூறுகையில்..,

மதுரை சோழவந்தான் நகரியில் உள்ள கல்வி குழுமம் மாணவர்கள் உருவாக்கும் செயற்கைக் கோள் 3 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இந்த செயற்கைக் கோள் ரூ2கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு அது மற்ற செயற்கைக் கோள்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் செயல்பட்டு தகவல்களை பெறுவதாக இருக்கும். தமிழகத்தில் பள்ளிகள் அளவில் முதல் செயற்கைக் கோளை உருவாக்கும் கல்வி நிறுவனமாக கல்வி குழும நிறுவனம் திகழ்கிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் யுனிசெக் இந்தியா செயலாளர் நிகில் ரியாஸ், அஸ்வின் ரெட்டி, இன்பிஸத் யூசுப் நாத், சைநாத் வம்ஷா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.