• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

குரங்கு அம்மைக்கு பலியான முதல் நபர்…

Byகாயத்ரி

Aug 1, 2022

இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் குரங்கு அம்மை நோய் தற்போது மிக வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்ட ஒருவர் கேரளாவில் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் . குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட குருவாயூர் என்ற பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனை அடுத்து அவரிடம் இருந்து எடுத்த மாதிரிகள் வைரலாஜி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். குரங்கு அம்மை என்பது உயிர் பறிக்கும் நோய் கிடையாது என்றும் தாமதமாக சிகிச்சை கிடைப்பதால் உயிர்பலி ஏற்பட்டிருக்கலாம் என்றும் இருப்பினும் விசாரணையின் முடிவில் தான் உண்மை தெரியவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது கேரளாவில் 3 பேரும் டெல்லி மற்றும் ஆந்திராவில் தலா ஒருவர் என மொத்தம் ஐந்து பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.