• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மக்கள் நீதி மய்யத்தில் இன்று முதல் விருப்ப மனு

Byமதி

Dec 8, 2021

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கமலின் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பரபரப்பாக தயராகிவருகின்றனர். மக்கள் நீதி மய்யம் போட்டியிட உள்ளது என்பதை அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் முன்னரே அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், கட்சியின் துணைத் தலைவர் மவுரியா தலைமையிலான, மாநில தேர்தல் தலைமை பணிக்குழு பரிந்துரை அடிப்படையில், வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும், அனைத்து மாவட்டங்களுக்குமான தேர்தல் பணிக்குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய விரும்புவோர், இன்று முதல், http://www.maiam.com/application-form.phpஎன்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் எனவும், தேர்தலில் போட்டியிட திருநங்கையருக்கு கட்டணம் ஏதுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பொது பிரிவுக்கு, 2,000 ரூபாய்; பெண்கள் மற்றும் எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினருக்கு 1,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது. நகராட்சிக்கு 1,000 – 500 ரூபாய்; பேரூராட்சிக்கு 500 – 250 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.