திருச்சி மாவட்டம் தீரன் நகரைச் சேர்ந்தவர் தமிழினியன் (33). மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்தவரான இவர், சினிமா படங்களில் பணியாற்றி வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் இலியானா பயன்படுத்தும் ஸ்கூட்டரை வடிவமைத்து தனது திறமையை வெளிபடுத்தியவர். தற்போது சிங்கப்பூர் விண்டேஜ் கேமரா மியூசியத்தில் வைப்பதற்காக கேமரா வடிவ காரை உருவாக்கி அசத்தியுள்ளார்.
உலகின் முதல் கேமராவான ‘வுட்டன் பெல்லோ’ கேமரா போலவே வடிவமைத்து மிரட்டியுள்ளார். 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த கேமரா வடிவ காரை, தனது நிறுவனத்தின் முன் நிறுத்தி பலரையும் வியப்பில் மிரளவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.