• Wed. Mar 22nd, 2023

பசுமை விடியல்.. விருது நகர் ஆட்சியரின் அசத்தல் திட்டம்!..

By

Aug 20, 2021

தமிழகத்திலேயே முதல் முறையாக வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய பகுதியில் “பசுமை விடியல்” என்ற பெயரில் பெருவாரியான மரம் நடும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் இயற்கையை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்திலேயே முதல் முறையாக விருதுநகர் மாவட்டத்தில் “பசுமை விடியல்” என்ற பெயரில் பெருவாரியான மரம் நடும் திட்டத்தை தொடங்கியுள்ளார். காரியாபட்டி பகுதியில் இத்திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இன்று குன்னூர் ஊராட்சியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் மரம் நடும் திட்டத்தை அரசு அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *