நாடுமுழுவதும் ஒமிக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
மேலும் உலக சுகாதார நிறுவனமும் பொது வெளியில் கொண்டாடத்தை தவிர்க்குமாரும் அறிவுறுத்தி உள்ளது.
மேலும் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் எதிரொலி காரணமாக தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்
மேலும் ஒமிக்ரான் பாதிப்பு மற்றும் பரவல் நிலைமை கைமீறும் பட்சத்தில் முதற்கட்டமாக இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவது குறித்தும் பிரதமர் நாளை ஆலோசனை கூட்டத்தில் பேசப்படலாம் என கூறப்படுகிறது.