• Fri. Apr 26th, 2024

அடேங்கப்பா…வாயைப் பிளக்க வைத்த செட்டில்மென்ட் தீர்ப்பு…

துபாய் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவரும், துபாய் துணை அதிபர் மற்றும் பிரதமர் பதவியை வகித்து வருபவருமான ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம், தனது மனைவி இளவசரி ஹயாவுக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள தொகையை ஜீவனாம்சமாக தர உத்தரவிட்டுள்ளது.

துபாய் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவரும், துபாய் துணை அதிபர் மற்றும் பிரதமர் பதவியை வகித்து வருபவருமான ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம், தனது மனைவி இளவசரி ஹயாவுக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள லண்டன் வீடுகள், 400 ரேஸ் குதிரைகள் உள்ளிட்டவற்றை விவாகரத்துக்கான ஈடாக தர வேண்டும் என்று லண்டன் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அல் மக்தூம் குடும்பம் துபாயிலேயே மிகப் பெரிய பணக்கார குடும்பம், ரியல் எஸ்டேட் மூலம் இவர்கள் வாங்கிப் போடாத சொத்துக்களே இல்லை. நவீன துபாயை கட்டியமைத்தவர்களும் இவர்களே. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம்தான் தற்போது பிரதமராகவும், துணை அதிபராகவும் இருக்கிறார். இவருக்கு மொத்தம் 6 மனைவிகள். யாரும் இப்போது இவருடன் இல்லை. எல்லோரையும் விவாகரத்து செய்து விட்டார்.

இளவரசி ஹயாஇவர் விவாகரத்து செய்த மனைவியரில் ஒருவர்தான் ஹயா பின்த் அல் ஹூசைன் (வயது 47). ஹயாவை மக்தூம் சத்தம் போடாமல் விவாகரத்து செய்தார். அதாவது ஷரியா சட்டப்படி, ஹயாவுக்குக் கூட தெரிவிக்காமல் அவரை விவாகரத்து செய்து விட்டார். இதனால் ஆவேசமடைந்த ஹயா, லண்டன் கோர்ட்டில் வழக்குப் போட்டார். தான் அளவில்லாத செல்வத்துடனும், பணத்துடன் வாழ்ந்ததாகவும் ஆனால் தனக்கே தெரியாமல் அல் மக்தூம் தன்னை விவாகரத்து செய்து விட்டதாகவும் அவர் வழக்கில் கூறியிருந்தார்.

மேலும் லண்டனில் உள்ள மாளிகைகள், 400க்கும் மேற்பட்ட ரேஸ் குதிரைகள், பெருமளவில் பணம் தனக்கு ஜீவனாம்சமாக தரப்பட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த லண்டன் ஹைகோர்ட் தற்போது அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி கிட்டத்தட்ட 550 மில்லியன் பவுண்டுகள் அளவிலான சொத்துக்களையும், பணத்தையும், ஜீவனாம்சமாக தர வேண்டும் என்று அல் மக்தூமுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இளவரசி ஹயாதனது பாடிகார்டுகளில் ஒருவருடன் ஹயாவுக்கு கள்ளத் தொடர்பு இருந்த காரணத்தால்தான், ஹயாவை, அல் மக்தூம் விவாகரத்து செய்து விட்டார். இந்த விவகாரத்தை மறைப்பதற்காக தனது பிள்ளைகளின் வங்கிக் கணக்கிலிருந்து 6.7 மில்லியன் பவுண்டு பணத்தை எடுத்து பயன்படுத்தினார் ஹயா.

இதுகுறித்து கோர்ட்டில் நீதிபதிகள் கேட்டபோது, எனக்கு பயத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை. இதனால்தான் எனது குழந்தைகளின் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க நேரிட்டது என்று விளக்கினார் ஹயா.

ஒட்டுமொத்த ஜீவனாம்சத்தில் ஹயாவின் லண்டன் வீடுகளைப் பராமரிக்க மட்டும் 251.5 மில்லியன் பவுண்டு பணத்தைத் தர கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2016ம் ஆண்டு கென்சிங்டன் பாலஸ் அருகே 87.5 மில்லியன் பவுண்டு மதிப்பில் ஒரு பெரிய மாளிகையை வாங்கிய ஹயா அதை 14.7 மில்லியன் பவுண்டு பணத்தை செலவிட்டு புதுப்பித்தார். அந்தப் பணத்தையும் ஹயாவுக்கு வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இளவரசி ஹயாஇளவரசி ஹயாவுக்கு குதிரைகள் என்றால் உயிராம். அவரும் அவரது குழந்தைகளும் 60 ரேஸ் குதிரைகளை வைத்துள்ளனர். இவற்றைப் பராமரிக்க 75 மில்லியன் பவுண்டு பணத்தைக் கோரியிருந்தார் ஹயா. அல் மக்தூமை கல்யாணம் செய்த பிறகு 400 ரேஸ் குதிரைகளை அவர் வாங்கினார். ஏதாவது ரேஸ் குதிரையைப் பிடித்து விட்டால் உடனே வாங்கி விடுவாராம்.

ஹயாவுக்கு, வருடத்திற்கு 2 வாரங்கள் இங்கிலாந்தில் தங்கவும், 9 வாரங்கள் வெளிநாடுகளில் சுற்றுலா செல்லவும் தேவைப்படும் பணத்தையும் அல் மக்தூம்தான் தர வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆக மொத்தம் வருடத்திற்கு 5.1 மில்லியன் பவுண்டு பணத்தை வருடா வருடம் அல் மக்தூம், ஹயாவுக்கு அளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மொத்தத் தீர்ப்பையும் படித்துப் பார்த்தால் தலையே சுற்றிப் போய் விடும். அந்த அளவுக்கு பணத்தையும், பொருட்களையும், வசதிகளையும் ஹயாவுக்குத் தர அல் மக்தூமுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *