ஒட்டு மொத்த தமிழகமும் எப்போது எடப்பாடியார் முதலமைச்சராவர் என்று எதிர்நோக்கி காத்திருக்கின்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமனி பேச்சு..!
ஒட்டு மொத்த தமிழகமும் எப்போது எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராவர் என்று எதிர்நோக்கி காத்திருக்கின்றது என்று சிவகாசியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமனி பேசினார்.
சிவகாசியில் விருதுநகர் மேற்கு, கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்து பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக தலைமை நிலைய செயலாளரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமனி, தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவரும், முன்னாள் அமைச்சர் ஆர்..பி.உதயகுமார் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினர்.
திமுக விற்கு எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..,
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது, எங்கு பார்த்தாலும் ஒரே நாடு ஒரே தேர்தல்தான் பேச்சாக உள்ளது. தேர்தலை உற்சாகமாக சந்திப்பது குறித்தும் நமது தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி அண்ணன் அவர்களின் அண்ணன் மகன் விவேக் திருமண வரவேற்பு பத்திரிக்கை கொடுக்கும் வகையிலும் மதுரை மாநாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்களுக்கு நன்றி சொல்லும் வகையிலும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. கழகப் பொதுச்செயலாளர், முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடிார் அவர்களின் ஆசியோடு நடைபெறும் கொங்கு மண்டலத்தின் சிங்கம் அணண்ன் எடப்பாடியார் வழியில் கழகத்தை சிறப்பாக வழிநடத்திக் கொண்டு வரும் எஸ்.பி.வேலுமணியின் அண்ணன் மகன் திருமண வரவேற்பு விழாவில் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவோம். உங்கள் மத்தியில் இப்போது ஒரு உண்மையை நான் சொல்கிறேன். எனக்கு திமுக ஆட்சியில் பிரச்சினை ஏற்பட்ட போது என்னை பாதுகாத்தவர் அண்ணன் எஸ்.பி.வேலுமணி அவர்கள்தான். 21 நாட்கள் என்னை எங்கெல்லாம் அழைத்துச் சென்றார்கள் எனக்கு மட்டும்தான் தெரியும். தொண்டர்களுக்கு தோழனாக உழைக்கக்கூடிய அண்ணன் வேலுமணி அவர்கள்தான் எனனையும் பாதுகாத்தார். மதுரை மாநாட்டில் விருதுநகர் இரண்டு மாவட்ட கழகம் சார்பாக ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு எடப்பாடியார் நன்மதிப்பை பெற்றுள்ளோம். தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. எங்கு பார்த்தாலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் விவாதம் நடைபெற்று வருகின்றது. இந்த காலம் திமுகவிற்கு இறங்குமுகம். அண்ணா திமுகவிற்கு ஏறுமுகம். ஆகவே நாளை ஆட்சி நமதே எடப்பாடியார் முதலமைச்சராக போறது உறுதி. அதிமுக தொண்டர்கள் மதுரை மாநாட்டிற்கு பிறகு மிகப்பெரிய எழுச்சியை பெற்றுள்ளனர். எங்கு பார்த்தாலும் அண்ணா திமுக கொடி கட்டிய வாகனங்கள்தான் சொல்கிறது. அந்த அளவிற்கு மதுரை மாநாடு சிறப்பாக அமைந்துள்ளது. மாநாட்டிற்கு தலைமைச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் பெரும் பங்கு ஆற்றினர். எஸ்.பி. வேலுமணி அண்ணன் அவர்களுக்கு திமுக எந்த அளவுக்கு இடைஞ்சல் கொடுக்கின்றது என்பது நமக்கு எல்லாம் தெரியும். வேலை செய்யக்கூடியவர்களை முடக்கி விடுகின்ற வேலையில் தான் திமுக ஈடுபட்டுள்ளது. திமுகவின் நடவடிக்கை இன்றைக்கு கேலி கூத்தாகிவிட்டது. திமுகவுக்கு எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு அலை உள்ளது. வருகின்ற தேர்தல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை எடப்பாடியார் தலைமையில் உருவாக்கக்கூடிய தேர்தலாக அமையும். ஒரே நாடு, ஒரே தேர்தல் கண்டு திமுகவினர் மற்றும் தமிழக முதலமைச்சர் அலறுகின்றனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் அதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. பிறரை கெடுக்க நினைத்தவர்கள் இன்று கெட்டுப் போய் உள்ளனர். வருங்காலம் அதிமுகவின் காலம்தான் நாளை நமதே என்று பேசினார். ஒட்டு மொத்த தமிழகமும் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராவதை எதிர்நோக்கி காத்திருக்கின்றது.
தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமனி பேச்சு,
கூட்டத்தில் அதிமுக தலைமை நிலைய செயலாளரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமனி பேசும்போது, மதுரை மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி. ராஜேந்திரபாலாஜி, கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் மற்றும் அனைத்து மாநில, மாவட்ட, ஒன்றிய கழக பொறுப்பாளர்களுக்கும், அனைத்து சார்பு அணி நிர்வாகிகளுக்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மதுரை மாநாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி பேசக்கூடியவர் கே.டி. ராஜேந்திரபாலாஜி அவர்கள். செய்யாத குற்றத்திற்காக அவரை திமுக அரசு பழி வாங்கியது. ஒன்றுமே செய்யாத கே.டி. ராஜேந்திரபாலாஜியை கொலை குற்றவாளி போன்று போலீசார் தேடினர். பொய் வழக்கு போடுவதையே திமுக தொழிலாக கொண்டுள்ளது. கழக நிர்வாகிகள் யார் மீது பொய் வழக்கு போட்டாலும் அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் உறுதுணையாக இருப்பார். எனது சகோதரர் மகன் நியூஸ் ஜெ ஆரம்பித்து நடத்தக்கூடியவர்.அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த வேண்டும். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது எந்தத் தேர்தல் வந்தாலும் விருதுநகர் மாவட்டத்தில் ஏழு சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக மாபெறும் வெற்றி வாகைசூடும். ஏழு தொகுதிகளும் அதிமுக மாபெரும் வெற்றி பெறும். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர். மதுரை மாநாட்டிற்கு பிறகு மிகப்பெரும் எழுச்சி அதிமுக பெற்றுள்ளது. எப்போது எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தத் திட்டமும் கொடுக்காமல் ஒட்டு மொத்த தமிழக மக்களையும் ஏமாற்றி வருகின்றார். ஒட்டுமொத்த மக்களும் தற்போது எடப்பாடியார்தான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர் என்று பேசினார்.
கூட்டத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், எதிர்கோட்டை சுப்பிரமணியன், சந்திரபிரபாமுத்தையா, சிவசாமி, திருவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், மாநில அம்மா பேரவை இணை செயலாளர் வழக்கறிஞர் சேதுராமானுஜம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துப்பாண்டி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாபுராஜ், மாவட்ட மகளிரணி செயலாளர் சுபாஷினி, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர், விருதுநகர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கலாநிதி, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் சிவகாசி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார், கழக சிறுபாண்மை பிரிவு துணைத் தலைவர் சித்திக், விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட கழக இணைச்செயலாளர் அழகுராணி, விருதுநகர் நகரக் கழக செயலாளர் முகமது நயினார், சிவகாசி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் புதுப்பட்டி வி.ஆர்.கருப்பசாமி, விருதுநகர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.கே.கண்ணன், விருதுநகர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தர்மலிங்கம், விருதுநகர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர், மாவட்ட கவுன்சிலர் கே.ஏ.மச்சராஜா, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் சேதுராமன், அண்ணா தொழிற்சங்க மாநில இணைச்செயலாளர் சங்கரலிங்கம், மாவட்ட கவுன்சிலர் தடங்கம் நாகராஜ், விருதுநகர் கிழக்கு மாவட்ட அவை தலைவர் ஜெயப் பெருமாள், மாவட்ட இணைச்செயலாளர் ராஜேஸ்வரிவாசுதேவன், துணைச்செயலாளர் மாவட்ட கவுன்சிலர் இந்திரா கண்ணன், கிழக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் கே.வி.பூபாலன், கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் குருசாமி, வத்ராயிருப்பு வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்புராஜ், வத்திராயிருப்பு தெற்கு ஒன்றிய செயலாளர் சேதுவர்மன், ராஜபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் குருசாமி, ராஜபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் நவரத்தினம், சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ், சிவகாசி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கருப்பு என்ற லட்சுமிநாராயணன், சிவகாசி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வெங்கடேஷ், ராஜபாளையம் வடக்கு நகரக் கழக செயலாளர் வழக்கறிஞர் துரைமுருகேசன், ராஜபாளையம் தெற்கு நகர கழக செயலாளர் பரமசிவம், சிவகாசி மாநகராட்சியின் பகுதி கழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார், கருப்பசாமிபாண்டியன், சாம் என்ற ராஜா அபினேஸ்வரன், காரியாபட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ராமமூர்த்திராஜ், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் தோப்பூர் முருகன், சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.எஸ்.சண்முகக்கனி. மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தேவதுரை, நரிக்குடி ஒன்றிய கழக செயலாளர் பூமிநாதன், திருச்சுழி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துராமலிங்கம், திருச்சுழி வடக்கு ஒன்றிய செயலாளர் முனியாண்டி, அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முன்னாள் யூனியன் சேர்மன் வாசுதேவன், அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சங்கலிங்கம், நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராவிச்சந்திரன், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தங்கவேல், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மணிகண்டன், அருப்புக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சக்திவேல்பாண்டியன், சாத்தூர் நகரக் கழக செயலாளர் எம்.எஸ்.கே.இளங்கோவன், சிவகாசி பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, விருதுநகர் பொதுக்குழு உறுப்பினர் அருணா நாகசுப்ர மணியம், அருப்புக்கோட்டை பொதுக்குழு உறுப்பினர் வீர சுப்பிரமணியம், திருவில்லிபுத்தூர் பொதுக்குழு உறுப்பினர் தமிழரசி கனகராஜ், திருச்சுழி பொதுக்குழு உறுப்பினர் பழனி, சேத்தூர்பேரூராட்சி கழகத்தினுடைய செயலாளர் பொன்ராஜ் பாண்டியன், செட்டியார்பட்டி பேரூர் கழகச் செயலாளர் அங்குதுறைபாண்டியன், மம்சாபுரம் பேரூராட்சி செயலாளர் ராஜேஷ்குமார், வத்ராயிருப்பு பேரூர் கழக செயலாளர் வைகுண்டமூர்த்தி, கொடிக்குளம் பேரூர் கழக செயலாளர் சங்கரமூர்த்தி, சுந்தரபாண்டியன் பேரூ்ர் கழக செயலாளர் மாரிமுத்து, புதுப்பட்டி பேரூர் கழக செயலாளர் ஜெயக்கிரி, காரியாபட்டி பேரூர் கழகச் செயலாளர் விஜயன், மல்லாங்கிணறு பேரூர் கழகச் செயலாளர் அழகர்சாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய கழக செயலாளர் மயில்சாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்தையா, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முத்துராஜ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிலிப்வாசு, மாவட்ட மீணவர் அணி செயலாளர் காசிராஜன், மாவட்ட கழக பொருளாளர் தேன்ராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன், மாவட்ட இலககிய அணி தலைவர் என்.ஜிஓகாலனி மாரிமுத்து, மாவட்ட தொண்டரணி அஜய்கிருஷ்ணா, மாவட்ட அண்ணா தொழிற் சங்க கௌரவத் தலைவர் குருசாமி, அரசு பேருந்து விருதுநகர் மண்டல செயலாளர் குருச்சந்திரன், அண்ணா மின்சார பிரிவு செயலாளர் ஜெய்சங்கர், விருதுநகர் எம்ஜிஆர் மன்ற செயலாளர் நாகசுப்பிரமணியம், அம்மா பேரவை செயலாளர் கணேஷ்குரு, மாவட்ட வழக்கறிஞர் பொருளாளர் ஸ்ரீதர், மாவட்ட வழக்கறிஞர் மாரிஸ்குமார், மாவட்ட எம்ஜிஆர்மன்ற துணைசெயலாளர் ஸ்ரீராம் பாலகிருஷ்ணன், விருதுநகர் கிழக்கு அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கே.ஏ.மச்சேஸ்வரன், கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி, வழக்கறிஞர் பாலமுருகன், வீரேசன், பரமசிவம், வேங்கைமார்பன், சிவகாசி மாநகர கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்கள் பாண்டியராஜன், கருப்பசாமிபாண்டியன், வெம்பக்கோட்டை ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ராமராஜ்பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன், மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.