மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை, முத்துப்பாண்டிபட்டி, சடையாண்டிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் அருகில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், இந்த கிராம பகுதியில் மர்ம நபர்கள் வைத்த தீ மளமளவென பரவி மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும்பாலான பகுதிகளில் தீ கொழுந்துவிட்டு எரிந்து தீ பிளம்பாக காட்சியளித்தது.

தகவலறிந்து விரைந்து வந்த 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் மலைவாழ் மக்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து எரிந்து வரும் இந்த தீயின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் ஆயிரக்கணக்கான வன உயிரினங்கள் உயிரிழந்திருக்க கூடும் என கூறப்படுகிறது.
இந்த தீவிபத்து குறித்து உசிலம்பட்டி வனச்சரக அலுவலர்கள் மற்றும் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.