விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 161 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் 1 கோடியே 71 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் திட்ட அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் இராஜபாளையம் பகுதிகளைச் சேர்ந்த 161 மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு வழங்கினர். ஒரு இருசக்கர வண்டியின் விலை 1 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் வீதம் 161 இருசக்கர வாகனங்களுக்கு 1 கோடி 71 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது .
இந்த வாகனங்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட வேண்டிய வாகனம் காலதாமதமாக வழங்கப்பட்டதாகவும் பயனாளிகள் தெரிவித்தனர். தற்போது வழங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் உரிய நேரத்தில் வழங்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என மாற்றுத்திறனாளிகள் சங்கத்து உறுப்பினர்களும் நிர்வாகிகளும் தெரிவித்தனர்.