திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் வரை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இன்று சந்தனக்கூடு விழாவிற்காக மலை மேல் உள்ள தர்காவின் அருகில் உள்ள கல்லத்தி மரத்தில் தர்கா சார்பில் கொடி ஏற்றப்படுகிறது.
இதற்கு பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் ஜீவஜோதி தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையினை தொடர்ந்து மலை மேல் உள்ள தர்காவில் கொடியேற்ற அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கு மலை பாது பழனியாண்டவர் கோவில் செல்லும் வழியில் உள்ள கோட்டை தெரு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆகையால் இன்று எதுவும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர் ஏற்கனவே திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவர் கோவில் மலைப்பாதை, சரவணப் பொய்கை, தென்பரங்குன்றத்தில் உள்ள மலை பாதை மற்றும் மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், நெல்லி தோப்பு ,தர்கா மற்றும் சர்ச்சைக்குரிய தீபத்தூண் பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்காகவும் 120 போலீஸார் பணியில் உள்ளனர்.
இன்று பள்ளிவாசல் சார்பாக மலை மேல் உள்ள தர்கா அருகே உள்ள கள்ளத்தி மரத்தில் ‘ சந்தனக்கூடு கொடிமரம் ஏற்றுவதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் என கருதி மேலும் இரண்டு பட்டாலியன் 80 போலிஸார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர் .

மேலும் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் காவல் துணையானையர் இனிகோ திவ்யன் மற்றும் உதவி ஆணையர் சசி பிரியா Depends போலீசார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.




