தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருநல்லூர் பகுதியில் செல்லக்கூடிய வேதபுரி காட்டாறு வடிகால் வாய்க்கால் உள்ளது இந்த காட்டாற்றில் முறையாக தூர்வாராததால் நேற்று முன்தினம் மற்றும் நேற்று இப்பகுதியில் பெய்த கனமழையில் வெள்ளம் கரை புரண்டு ஓட ஆற்றின் கறைகள் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் அப்பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் இளம் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் சேதமடைந்துள்ளது.

இதனால் இப்பகுதி விவசாயிகள் சமீபத்தில் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கி நாசமானது என வேதனை தெரிவித்தவுடன் உடனடியாக சம்பத்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு எங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் எதிர்வரும் காலங்களில் காட்டாறு முறையாக தூர்வாரப்பட்டு மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழிவகை செல்லும்படி இப்பகுதி விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கின்றனர்,








