• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயின் தற்போதைய நிலை!

By

Aug 29, 2021 , ,

பெண் ஒருவர் குழந்தையை இரக்கமின்றி தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்த விசாரணையில், அந்த பெண் விழுப்புரம் மாவட்டம் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவழகன் என்பவரின் மனைவி துளசி என்பது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

அதனால், துளசியை ஆந்திராவில் உள்ள தாயிடம் விட்டுவிட்டு வந்த வடிவழகன், வீட்டில் இருந்த அவரின் செல்ஃபோனை எடுத்துப் பார்த்துள்ளார். அதில், ஒன்றரை வயது இளைய மகனை கொடூரமாக தாக்கும் வீடியோக்களை அவரே பதிவு செய்து வைத்திருந்தது தெரியவந்தது. படுகாயமடைந்த குழந்தை சிகிச்சைக்குப்பின் குணமடைந்து விட்டதாகவும், உறவினர்களின் பராமரிப்பில் நலமாக இருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, கணவர் வடிவழகன் கொடுத்த புகாரின் பேரில், மனைவி துளசி மீது விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.