ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சிபிஎம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட 36 பஞ்சாயத்துகளில் வாறுகால் வசதி தார் சாலை வசதி மின்விளக்கு வசதி,சுகாதார வசதிகள் உள்ளிட் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் முனியாண்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.