• Thu. Dec 12th, 2024

திருத்தங்கல் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்..!

Byadmin

Dec 13, 2023

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.
திருத்தங்கல் மண்டலத்தின் பல பகுதிகளில், 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. நகரின் பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. மேலும் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரும் நிறம் மாறி கலங்கலாக இருந்து வருகிறது.
திருத்தங்கல் – விருதுநகர் சாலையில் உள்ள ஆலமரத்துப்பட்டி பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஏராளமான குடிநீர் வீணாகி சாலையில் ஓடுகிறது. அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரும் கலங்கலாக உள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொது மக்கள் இருந்து வருகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்து, சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.