• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

முன்னாள் டிஜிபி ராஜேஸ்தாஸ் உடனடியாக கைதாக நீதிமன்றம் உத்தரவு

Byவிஷா

Apr 23, 2024

பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் உடனடியாக கைதாக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சரணடைய விலக்கு கோரிய ராஜேஷ்தாஸ் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ராஜேஷ்தாஸ_க்கு விழுப்புரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அமர்வு நீதிமன்றம் பிப்ரவரி மாதம் உறுதி செய்தது.
அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், அவர் உடனே கைது செய்யப்படுவார். உடனடியாக விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.