• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மின்கட்டண உயர்வுக்கு இடைக்காலத்தடை விதித்த நீதிமன்றம்..!

Byவிஷா

Aug 25, 2022

மின்கட்டண உயர்வுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலதடை விதித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கட்டணம் மாற்றப்படும் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு கூடுதலாக ரூ.27.50 கட்டணம் வசூலிக்கப்படும். 201- 300 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 301 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாததம் ஒன்றிற்கு ரூ.147.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மாததம் ஒன்றிற்கு ரூ.297.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.155 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் மின் கட்டண உயர்விற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாச்சலம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே உள்ளனர். சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் இல்லை. இந்த நிலையில் தமிழ்நாடு மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் மட்டும் இருக்கும் நிலையில் ஒழுங்குமுறை ஆணையம் கூடியது சட்டவிரோதம் என தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை மின் கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவமிநாதன், முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தொழில்நுட்ப உறுப்பினர் மற்றும் சட்டத்துறை உறுப்பினர் பொறுப்பிகள் காலியாக உள்ளது. . இரு காலியிடத்தை அரசு ஒரே நேரத்தில் நிரப்பியிருக்கலாம். எனவே , மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை தமிழ்நாடு மின்வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்தார். இந்த தடை உத்தரவு சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை தொடரும். அதே நேரத்தில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த அனுமதி வழங்கியும் உத்தரவிட்டார்.