

அடுத்த மோதல் ஆரம்பம் மாநகராட்சி அரசு மருத்துவமனைக்கிடையே குப்பைகளை தரம் பிரித்து வழங்காத அரசு மருத்துவமனை மீது மாநகராட்சி குற்றச்சாட்டு.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறிக்கை மருத்துவ கழிவுகள் மற்றும் மருத்துவமனையில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து தனித்தனியே கொட்ட வேண்டும். ஆனால் மருத்துவமனை தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சிலர் மருத்துவமனை வார்டுகளில் சேரும் மருத்துவ கழிவுகள் தரம் பிரிக்காமல் மொத்தமாக குப்பைத் தொட்டியில் போடுவதாக மாநகராட்சி குற்றச்சாட்டை முன்வைத்தனர். குறிப்பாக, அறுவை சிகிச்சையின் போது வரும் பஞ்சு சிரஞ்சு சலைன் பாட்டில் உன்னிடம் மருத்துவ கழிவுகள் மொத்தமாக குப்பை தொட்டியில் போடுவதால் அதை நாங்கள் பிரிக்கும் கையில் ஊசி குத்துவதும் மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது குறித்து மருத்துவமனை தனியார் ஒப்பந்ததாரரிடம் மருத்துவக் கழிவுகளை தரம் பிரித்து தாருங்கள் என பலமுறை சொல்லியும் எங்களால் இப்படித்தான் தர முடியும் என சொன்னதாக தகவல் வந்துள்ளது. இது குறித்து மருத்துவமனை டீன் ரத்தினவேல் கூறுகையில், குப்பைகளை தவறாக கையாளும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


