• Wed. Jul 8th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

நான்கு வழிச்சாலையில் கண்டைனர் லாரி மீது பைக் மோதி விபத்து.., வாலிபர்கள் இருவர் பலி ஒருவர் படுகாயம்…

ByKalamegam Viswanathan

Oct 5, 2023

விபத்துக் குறித்து மதுரை தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் சோளங்குரூணி கிராமத்தை சேர்ந்த ஜெயமுருகன் மகன் ரஞ்சித்( வயது 16). இதே சோளங்குருணி கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் வீர சந்தானம் (வயது 18). மற்றொரு வாலிபரின் பெயர் முகவரி தெரியவில்லை படுகாயம் அடைந்த வாலிபர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போக்குவரத்து புலனாய்வு போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மண்டேலா நகரில் இருந்து கண்டெய்னர் லாரி மாட்டுத்தாவணி நோக்கி செல்லும்போது அமிக்ஆ ஓட்டல் அருகே ஈச்சனோடை பிரிவிலிருந்து ரஞ்சித் வீர சந்தானம் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரும் வண்டியில் எதிர்ப்பாதையின் வழியே வேகமாக வந்தபோது கண்டெய்னர் லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.

விபத்து நடந்த சம்பவ இடத்திலேயே ரஞ்சித்,,வீர சந்தானம் பலியாகினர். மற்றொரு வாலிபர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். விபத்தில் பலியான வாலிபரகனின் உடல்கள் கைப்பற்றப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.