• Wed. Jul 8th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

ஏழு வருடங்களுக்குப் பிறகு குதிரை எடுப்பு திருவிழா.., 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு…

ByKalamegam Viswanathan

Oct 5, 2023

மதுரை திருநகர் உள்ள விளாச்சேரி பகுதியில் ஸ்ரீ அழகு நாச்சியார் அம்மன் மற்றும் ஸ்ரீ அய்யனார் கோவில் அமைந்துள்ளது. விளாச்சேரி பகுதியில் ஸ்ரீ அழகு நாச்சியார் அம்மன் மற்றும் அய்யனார் கோவில் மிகவும் விசேஷமான ஒன்று. இந்தக் கோவிலின் 34 ஆம் ஆண்டு குதிரை எடுப்பு மற்றும் புரட்டாசி பொங்கல் விழா இன்று நடைபெற்றது.

இத்திருவிழாவில் விளாச்சேரி சுற்றியுள்ள  கிராமத்தில் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன்  வேண்டி குதிரை எடுத்தனர். சாமி குதிரையின் முன்னர் முதியவர்கள், இளம் பெண்கள், ஆண்கள் ஆட்டம் ஆடி 15க்கும் மேற்பட்ட குதிரைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.