• Tue. Apr 22nd, 2025

விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் திருப்பணி இன்றுதொடக்கம்.

கோட்டார் ஸ்ரீ கைகொண்ட விநாயகர் திருக்கோயிலில், தமிழக சட்டமன்ற அறிவிப்பு 23-24 ம் ஆண்டின் படி பொதுநல நிதி ரூ. 25.80 லட்சம் செலவில், கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் துவக்க விழா இன்று(மார்ச்_21) காலை 9.30 மணி அளவில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் பழனிக்குமார் முன்னிலை வகித்தார். மராமத்து பொறியாளர் ராஜ்குமார், ஸ்ரீகாரியம் ராமச்சந்திரன், 38வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியன், திமுக வட்ட பிரதிநிதி முருகப்பெருமாள், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்காந்த், வார்டு திமுக நிர்வாகிகள் செல்வன், சிவம் நாகராஜன், ஹரிகரன், ஒப்பந்தகாரர் மோகன்தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.