• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

மதுரை வீரன் நொண்டி கருப்பணசாமி கும்பாபிஷேக விழா..,

ByKalamegam Viswanathan

Dec 1, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகே வைத்தியநாதபுரம் காட்டுநாயக்கன் சிவகங்கை ராமன் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி, ஸ்ரீ வெள்ளையம்மாள் சுவாமி, ஸ்ரீ பொம்மி அம்மாள் ,சுவாமி ஸ்ரீ நொண்டி கருப்பு சுவாமிகளின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

பிரசாத் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கணபதி பூஜை உடன் தொடங்கி பூர்ணஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை பூஜையினை நடத்தினர். தொடர்ந்து காலை கடம் புறப்பாடாகி திருக்கோவிலை சுற்றி வலம் வந்து கும்பத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது .
அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி மா பொடி திரவ பொடி இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு அன்னதானம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சிவகங்கை ராமன் வகையறாக்கள் காட்டுநாயக்கன் சமூகத்தினர் செய்திருந்தனர்.