• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பாஜவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆறே நாளில் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்

பாஜகவில் இணைந்த ஆறு நாட்களில் அக்கட்சியில் இருந்து வெளியேறி மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளார் பஞ்சாப் சட்டப்பேரவை உறுப்பினர் பல்விந்தர் சிங் லட்டி
இன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள பல்விந்தர் சிங் லட்டி பஞ்சாப் விவகாரங்களுக்கான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளர் ஹரிஷ் சவுத்ரி மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி ஆகியோர் முன்னிலையில் நேற்று இரவு காங்கிரஸ் கட்சிக்கு திரும்பியுள்ளதாக கூறியுள்ளார்.


டிசம்பர் 28 அன்று டெல்லியில் பாஜகவின் பஞ்சாப் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலையில் ஸ்ரீ ஹர்கோபிந்த்பூரின் சட்டபேரவை உறுப்பினரான பல்விந்தர் சிங் லட்டியும் , காடியன் சட்டபேரவை உறுப்பினரான பதேஜாங் சிங் பஜ்வாயும் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.