• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தன் இறுதி பணி நாளில் பயணிகளுக்கு இனிப்பு கொடுத்து விடைபெற்ற நடத்துனர்…

Byp Kumar

Aug 22, 2022

அரசு பேருந்து நடத்தினர் தனது பணி ஓய்வு பெறும் நாளில் இறுதிப் பயணத்தின் போது தன்னுடன் பயணம் செய்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து பெற்ற காட்சி பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டது அனைவரையும் கண்கலங்க செய்தது.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்துள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் திண்டுக்கல் போக்குவரத்து பணிமனை ஒன்றில் திண்டுக்கலில் இருந்து மதுரை செல்லும் அரசு விரைவு பேருந்தில் பல ஆண்டுகளாக நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று பாஸ்கரனுக்கு பணி ஓய்வு கிடைக்கப்பட்டு ஓய்வு பெற இருக்கும் நிலையில், தான் நடத்துனராக சென்று வந்த திண்டுக்கல் டு மதுரை வழித்தடத்தில் தனது நிறைவு பயணத்தை மேற்கொண்டார். அப்பொழுது தன்னுடன் பயணித்த பயணிகளை மறக்க முடியாமல் தனது ஓய்வு பெறும் நாளில் பயணித்த பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி தன்னை ஆசீர்வதிக்கும் படி கேட்டுக் கொண்டார். இனிப்புகளை பெற்றுக் கொண்ட பயணிகள் நடத்துனர் பாஸ்கரனுக்கு ஓய்வு காலம் சிறப்பாக இருக்கும் படி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்காட்சியானது பேருந்தில் பயணம் செய்த நபர் வீடியோவாக பதிவு செய்து வலைதளத்தில் வெளியிட்டது பார்ப்பவர்கள் கண்களை கலங்கச் செய்தது. பயணிகளையும், தான் பார்த்த வேலையையும் விட்டுப் பிரிய மனம் இல்லா நடத்துனர் பாஸ்கரனின் இந்த செயல் அனைவரையும் வெகுவாக கவர்ந்து கண்கலங்க செய்தது.