• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

யோகா மையங்களின் போட்டியாளர்கள் தங்கம் வென்று அசத்தல்..,

BySeenu

May 25, 2025

கோவை சரவணம்பட்டி, சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் செயல் பட்டுவரும் கோவை பிராணா யோகா மையத்தி்ல்,பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் என வயது வித்தியாசமின்றி பலரும் யோகா பயிற்சி பெற்று வருகின்றனர்.

இது போன்ற பயிற்சியாளர்களை தேசிய,சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு, அதில் சாதனை படைக்கவும் ஊக்கம் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை பிராணா யோகா மையம் மற்றும் 15 யோகா மையங்களின் சார்பாக சர்வதேச அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேஷியா நாட்டில் பாலி நகரில் நடைபெற்றது..

இதில் கோவை பிராணா யோகா மையத்தின் நிறுவனர்கள் ஜெயலட்சுமி,மோகன்ராஜ் மற்றும் எண்ணற்ற ஆசிரியர்கள் நடுவர்களாக கலந்து கொண்டனர்.

இந்தியா, மொரிஷியஸ், பஹ்ரைன் துபாய்,அமெரிக்கா, இந்தோனேஷியா, மஸ்கட்,சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட யோகா வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற இதில்,கோவை பிராணா யோகா மையத்துடன் இணைந்து 15-க்கும் மேற்பட்ட யோகா மையங்களின் போட்டியாளர்கள் தங்க பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.

இந்நிலையில் பதக்கங்கள் பெற்று கோவை திரும்பிய வெற்றியாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..

இது குறித்து, கோவை பிராணா யோகா மைய நிறுவனர்கள் ஜெயலட்சுமி,மோகன்ராஜ் ஆகியோர் கூறுகையில், தற்போது உடல் ஆரோக்கியம்,மன அழுத்தத்தில் இருந்து விடுபட என பலர் எங்களது பிராணா யோகா மையத்திற்கு வருவதாகவும்,ஆனால் இது போன்று வருபவர்கள் தேசிய,சர்வதேச போட்டிகளிலும் ஆர்வமுடன் கலந்து கொள்வதாகவும், ஆசிரியர்களாக பயிற்சி பெற்று தனித்துவமாக யோகா மையங்கள் தொடங்கி செயல்படுவதாகவும் தெரிவித்தனர்.

பிராணா யோகா மையத்தில் பயற்சி பெற்று பதக்கம் வென்ற பலரும் பள்ளி கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி எல்லா வயதினரும் குறிப்பாக பெண்களும் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.