விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றினார்.

இராஜபாளையத்தில் உள்ள கூட்டம் மக்கள் வெள்ளம் கடல் போல் காட்சி அளிக்கிறது அடுத்த ஆண்டு சட்டமன்ற தொகுதியில் இராஜபாளையம் வெற்றி மக்களின் முகத்தில் எழுச்சி தெரிகிறது.
தேர்தல் வெற்றியை தேர்வு செய்வது மக்கள் தான் ஆனால் திமுக கூட்டணியை நம்பி நிற்கிறது நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம் திமுக ஆட்சியாக மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் எங்களை பற்றி விமர்சனம் செய்கிறார் நாங்கள் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி விமர்சனம் செய்ய ஆரம்பித்தால் நிறைய விமர்சனம் செய்யலாம் நாங்கள் நாகரிகம் கருதி விமர்சனத்தை தவிர்க்கிறோம். இருந்தபோதிலும் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய கொள்கை இழந்து விட்டது திமுகவிடம் எந்த ஒரு போராட்டத்தின் கேட்டுத்தான் செய்யக்கூடிய நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது திமுக கம்யூனிஸ்ட் கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக விளங்கி வருகிறது என சாடினார்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் உதவி திட்டத்தை கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் இப்போது எந்த ஒரு வாக்குறுதி நிறைவேற்றவில்லை. அதேபோல் வேலை வாய்ப்பு திட்டத்தில் 5,75,000 காலி பணியாளர் நிரப்பாமல் உள்ளது என பேசினார்.
அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் தொகுப்பு 20500 வழங்கப்பட்டது. திமுக ஆட்சி காலத்தில் அதிலும் ஊழல் செய்து பொங்கல் தொகுப்பை நிறுத்திவிட்டனர். கொரோனா காலகட்டத்தில் வருமானமே இல்லாத நேரத்திலும் எங்கள் ஆட்சியில் விலைவாசி ஏற்றமில்லாமல் ஆட்சி நடத்தி மக்களே கஷ்டப்படுத்தாமல் வரிவிதிக்காமல் ஆட்சி நடத்தினோம். ஆனால் திமுக அரசு பல மடங்கு வரியை உயர்த்தி விட்டது குறிப்பாக ராஜபாளையத்தில் ஆயிரம் ரூபாய் வரி வாங்கிய இடத்தில் 2000 ரூபாய் என வரி உயர்த்துள்ளனர்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுது தூய்மை பணியாளர்கள் போராட்டம் போது ஆதரவு தெரிவித்தது. இப்போது திமுக ஆட்சியில் இருக்கும் பொழுது தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் திமுக அரசு செவி சாய்க்கவில்லை திமுக கூட்டணி இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற எந்த கூட்டணி கட்சியும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.

திமுக அரசு குடும்ப ஆசையாகும் வாரிசு அரசாகவும் செயல்பட்டு வருகிறது அந்த அரசை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இலவசமாக தீபாவளி திருநாளுக்கு சேலைகள் வழங்கப்படும் என குற்றச்சாட்டை முன்வைத்து சிறப்புரையாற்றினார். 2026 நடைபெறும் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் அதற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டுமென மக்களிடம் கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஆர் பி உதயகுமார் காமராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
