• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

லஞ்சத்திற்கு அடிபோட அலைக்கழிக்கப்படும் சாமானியர் எப்போ சார் திருந்துவீங்க ?

சாமானியர்கள் அனைவரும் பயன்பட வேண்டும் என்று தான் அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.அதற்கு தமிழக அரசு அதற்காக அதிகாரிகளை நியமித்து சம்பளம் மேல் படி கீழ் படி என்று அனைத்து படிகளையும் வழங்கி சிறப்பித்து வந்தாலும், சில பல நூறு நோட்டுகளுக்காக இவர்கள் செய்யக்கூடிய செயல் அனைவரையும் வேதனையில் ஆழ்த்துகிறது.

ஆம் அப்படி ஒரு சம்பவம் தான் சாத்தூர் பகுதியில் அரங்கேறி உள்ளது. சாத்தூர் பெரிய கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவி.இவர் வழக்கறிஞராக பணி புரிந்து வருகிறார். பட்டா மாறுதல் கோரி சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை செய்தும் அதற்கு நடவடிக்கை எடுக்க வில்லை. ஒரு வருடங்களுக்கு மேல் இந்த பட்டா மாறுதல் பிரச்சனை மாவட்ட ஆட்சியரிடம் புகாராக செல்கிறது. மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்கக்கோரி வட்டாட்சியருக்கு உத்தரவிடுகிறார்.ஆனால் அப்போது இந்த பட்டா மாறுதல் பிரச்னை கிடப்பில் போடப்படுகிறது. இந்த பிரச்னை இன்று நேற்று அல்ல மூன்று தாசில்தார்களை கண்ட பிரச்னை.

இது குறித்து ரவி கூறுகையில் நான் சாத்தூர் வட்டம், சத்திரப்பட்டி வருவாய் கிராமத்தில் உள்ள சர்வே எண்: 48/B8, 50/1 & 50/2ல் உள்ள நிலத்தின் ஒரு பகுதியை 01.03.2006 அன்று கிரையம் பெற்றுள்ளேன். கிரையம் செய்தவுடன் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்தும் எனக்கு பட்டா வழங்கப்படவில்லை. நான் 12.08.2020 அன்று சர்வே எண்: 48/38, 50/1 & 50/2க்கு பட்டா வேண்டி மனு செய்து இருந்தேன். என்னுடைய மனு எண்:; 2020/0105/26/128081. மேற்படி மனுவிற்கு சர்வே எண்: 50/1 மற்றும் 50/2க்கு பட்டா வழங்கப்பட்டும், சர்வே எண்: 48/38(தற்சமயம் சர்வே dictor 48/384}க்கு பட்டா வழங்கப்படவில்லை. 48/38(தற்சமயம் சர்வே எண் 48/3B4}க்கு பட்டா வழங்காததற்கு எவ்வித காரணமும் பதிலும் தெரியப்படுத்தவில்லை. இது இயற்கை நீதியின் கொள்கைகளுக்கு எதிரானது. இதன் வாயிலாக சாத்தூர் வட்டாச்சியர் அவர்கள் சாதாரண பொதுமக்கள் பற்றி எவ்வித கவலையும் இன்றி பணிபுரிந்து வருகிறார்கள் என்பது மிகவும் தெளிவாக தெரிய வருகிறது. நான் சாத்தூர் வட்டாட்சியரிடம் ஏன் சர்வே எண்: 48/38(தற்சமயம் சர்வே எண் 48/384க்கு பட்டா வழங்கவில்லை. என்று கேட்டதற்கு பழைய பட்டாதாரர் பெயர் மாறி உள்ளது என்றும் என்னை RDO அலுவலகத்தில் புகார் மனு செய்யுமாறு கூறிவிட்டார்கள். சாத்தூர் வட்டாட்சியரின் அறிவுறுத்தலின் பெயரில் சாத்தூர் RDO அவர்களுக்கு 12.07.2021 அன்று அனைத்து ஆவணங்களுடம் புகார் மனு அனுப்பினேன். என்னுடைய 12.07.2021 தேதியிட்ட (மலுவை சாத்தூர் வட்டாட்சியருக்கு விசாரணை செய்து விசாரணை அறிக்கையை விரைவில் அனுப்பி வைக்குமாறு வட்டாட்சியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார் என்று RDO அலுவலக கடிதம் ந.க.அ3/003/2021 நாள்:30.07 2021 வாயிலாக எனக்கு தெரியப்படுத்தப்பட்டது.நான் 24.09.2029 அன்று சாத்தூர் வட்டாட்சியரை நேரில் சந்தித்து என்னுடைய மனு மீறு தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன் மேலும் வட்டாட்சியரிடம் இதே சர்வே எண்ணில் 24.12.2007ல் அன்றய சாத்தூர் வட்டாட்சியர் வேறு ஒருவருக்கு பட்டா வழங்கியுள்ளார்கள் என்றும் மேற்படி ஆவணங்களில் உள்ள உள்ள பட்டாதாரர் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் கூறியுள்ளார்கள் என்றும் அதற்குரிய ஆவணங்களையும் சமர்பித்தேன். மேற்படி என்னுடைய மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் 23.10.2021 அன்று தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு(26.11.2021) அனுப்பினேன்.

நான் 17.12.2021 அன்று சாத்தார் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்த பொழுது அங்கு பணியில் இருந்த அலுவலர் சரியான முறையில் பதில் சொல்லாமல் மிகவும் அலட்சியமாகவும் விசாரணைக்கு அழைக்கும் பொழுது வந்தால் போதும் அதுவரை இங்கு வராதீர்கள் என்று கூறிவிட்டார்கள் இதனால் கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த பட்டா பெறுவதருக்கு அலைக்கறிக்கப்பட்டு வருகிறேன். இதனால் எனக்கு கால விரயம், பண இறப்பு மற்றும் மிகுந்த மன உழைச்சல் ஏற்பட்டது.
சாத்தூர் துணை வட்டாட்சியர்(பொது தகவல் அலுவலர்) அவர்கள் என்னுடைய 06.02.2021 தேதியிட்ட RTV(2005) Atன் மனுவிற்கு சரியான பதில் அனுப்பவில்லை. தமிழ் நாடு தகவல் ஆணையர் அவர்களின் விசாரணை(வழக்கு எண்: 7728/விசாரணை/E/2021}ல் 15 தினங்களில் தகவல்களை வழங்குவதாக ஏற்புளிப்பு செய்துள்ளார். ஆனால் சாத்தூர் துணை வட்டாட்சியர் அவற்கள் இதுவரை என்னுடைய 06.022021 தேதியிட்ட RTI(2005) Atன் மனுவில் கேட்கப்பட்ட இனம் ஒன்றுக்கு இது வரை பதில் அனுப்பவில்லை. நான் 11.10.2021 அன்று தமிழ் நாடு தகவல் ஆணையருக்கு என்னுடைய 06.02.2021 தேதியிட்ட RTI(2005) Acன் மனுவில் கேட்கப்பட்ட இனம் ஒன்றுக்கு இது வரை பதில் கிடைக்கவில்லை என்று புகார் மனு செய்துளேன். இது சாத்தூர் துணை வட்டாட்சியர் அவர்களின் அருட்சியததையும் பொது மக்கள் பற்றி எவ்வித கவலையும் இல்லை என்பதை காட்டுகிறது.


பாதிக்கப்பட்ட ரவி கூறியபடி ஒரு பட்டா மாறுதலுக்காக ஒரு வருடங்களுக்கும் மேலாக அலைகளிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கபட்டிருகிறார். அரசு நிர்வாகம் சற்று மெதுவாக செயல்படும் என்பது உண்மை தான். அதற்காக இவ்வளவு ஆமை வேகத்தில் அரசு நிர்வாகம் நடைபெற காரணம் என்ன மாவட்ட ஆட்சியருக்கு கீழ் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் தங்களுக்குள்ளேயே ஒரு குழு போல பேசி வைத்துக்கொண்டு நீங்க இந்த கோப்புகளை முடித்துகொடுத்தால் சிறப்பாக கவனித்து விடுகிறேன். இந்த கோப்புகளை இழுத்தடித்து பிறகு முடித்து கொடுங்கள், அவர் சரியாக யாரையும் கவனிக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரத்தினர் சிலர் மாவட்ட ஆட்சியர் காதுபட பேசுகின்றனர்.


மாவட்ட ஆட்சியர் உத்தரவுக்கு பதில் இல்லை, தனக்கு கீழ் நடக்கும் இப்படி பட்ட லஞ்ச வேட்டையையும் மாவட்ட ஆட்சியர் கண்டுகொள்வதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். பாதிக்கப்பட்ட ரவி இப்படி இழுத்தடிப்பதற்கு காரணம் கூட இறுதியில் லஞ்சத்தில் தான் வந்து நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் அரசு நல்லது செய்யும் என்று நம்பி அதிகாரிகளை தொடர்புகொள்கின்றனர். ஆனால் அதிகாரிகளோ உங்களுக்கு வேலை பார்க்க தான் நாங்கள் இருக்கிறோமா என்று நக்கல் செய்கின்றனர். இவர்கள் மக்களுக்கு வேலை செய்யவில்லை என்றால் இவர்கள் எதற்கு ,சம்பளம் எதற்கு அனைத்தும் வீண் தான். பட்டா மாறுதல் பிரச்சனையை ரவி வேறு விதத்தில் போராடி பெற்றாலும், நாளை சாமானிய மக்கள் எப்படி அதிகாரிகளை நம்புவார்கள். இது போன்று தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் களை எடுப்பாரா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.