புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி தேர்வு மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி – IV பதவிகளுக்கான தேர்வு நடைபெறுவதை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், தமிழக அரசின் பல்வேறு அரசுப் பணிகளுக்கு தகுதி உள்ள நபர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் இன்றையதினம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தொகுதி – IV பதவிக்கான தேர்வு நடைபெற்றது.

இதில், புதுக்கோட்டை மாநகராட்சி, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி தேர்வு மையத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. (TNPSC) தொகுதி – IV பதவிகளுக்கான தேர்வு இன்றையதினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 132 தேர்வு மையங்களில் இன்றையதினம் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி – IV தேர்வினை 28,622 நபர்கள் எழுதினர். இதில் 4,721 நபர்கள் தேர்வு எழுதவில்லை.
தேர்வு நடைபெறும் மையத்திற்குள் கைப்பேசி, கால்குலேட்டர் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் இத்தேர்வினை 132 முதன்மை கண்காணிப்பு அலுவலர்களாலும், 15 பறக்கும் படைகளாலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இத்தேர்வு நிகழ்வுகளை 132 வீடியோகிராபர்கள் மூலமாக கண்காணித்து தேர்வு நடைமுறைகள் வீடியோ பதிவு செய்யப்பட்டது. தடைசெய்யப்பட்டிருந்தது.
எனவே, இத்தேர்வுகள் நடைபெற்று வரும் அனைத்து மையங்களிலும் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உரிய முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு, சுமுகமான முறையில் தேர்வுகள் நடைபெற்றது எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மு-அருணா, அவர்கள் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, புதுக்கோட்டை வட்டாட்சியர் மு.செந்தில்நாயகி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.