• Tue. Dec 10th, 2024

அரசு ஊழியர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து அலட்சியப் படுத்துகிறார் தமிழக முதல்வர்

ByG.Suresh

Nov 11, 2024

ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து தமிழக முதல்வர் அலட்சியப் படுத்துகிறார் என ஆசிரியர் கழக தலைவர் மாயவன் பேட்டியளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் தமிழ்நாடு உயர் நிலை, மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் அதன் நிறுவன தலைவர் மாயவன் செய்தியாளர்களை சந்திக்கையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை தமிழக முதல்வர் கிள்ளுக்கீரையாக நினைத்து அலட்சியப்படுத்துகிறார் என பேட்டியளித்துள்ளார்.

காளையார்கோவிலில் உள்ள தனியார் மஹாலில் தமிழ்நாடு உயர் நிலை, மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் அதன் நிறுவன தலைவர் மாயவன், மாநில தலைவர் சேது செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக முழுவதுமிருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வாக்குறுதிகளாக அறிவித்து ஆட்சிக்கு வந்த முதல்வர் 43 மாதங்களாகியும் இதுவரை நிறைவேற்றாததை கண்டித்தல் உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் கூட்டத்திற்குபின் செய்தியாளர்களை சந்தித்த நிறுவனத்தலைவர் மாயவன் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வாக்குறுதிகளாக அறிவித்து எதிர்கட்சி தலைவராக இருந்த முதல்வர் ஆட்சிக்கு வந்து 43 மாதங்களாகியும் இதுவரை ஒரு சிறு கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து அலட்சியம் செய்து வருகிறார் முதல்வர் என்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை கண்டுகொள்ளாத முதல்வருக்கு இந்த பொதுக்குழு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் தெரிவித்ததுடன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களை கையில் எடுப்போம் என்றும் தெரிவித்ததுடன் அன்மையில் நிதிசார்ந்த கோரிக்கைகளை விடுத்து நிதிசாராத கோரிக்கைகளை நிறைவேற்றலாம் என அறிவித்தார்கள் இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன் அனைத்துவிதமாக கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என பேசினார். மேலும் தமிழக முதல்வர் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என நம்புவதாகவும் அப்படி கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் தமிழக முழுவதும் போராட்டத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கையில் எடுப்போம் எனவும் எச்சரித்தார். இந்த கூட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.