• Thu. Feb 19th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

முதல்வர் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்த உள்ளார்-அமைச்சர் மூர்த்தி பேச்சு..,

ByKalamegam Viswanathan

Feb 19, 2026

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் ஊராட்சி புதூர் கிராமத்தில் புதிய நியாய விலை கடையை பொது மக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளர் திருக்குமரன் மற்றும் நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் பொதுமக்களிடம் பேசிய மூர்த்தி,

யாரும் எதிர்பார்க்காமல் ராத்திரியோடு ராத்திரியாக முடிவு செய்து அதிகாலையில் ரூபாய் 5000 ரூபாயை மகளிர் உரிமை தொகையாக வங்கி கணக்கில் அனுப்பி வைத்தவர் நமது முதல்வர் அதேபோல் பொங்கல் பரிசு தொகப்பாக ரூபாய் 3000 வழங்கினார். இதுபோன்று எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்த காத்திருக்கிறார் அவருக்கு தொடர்ந்து நீங்கள் ஆதரவு தர வேண்டும்.

தமிழகத்தின் கடன் தொகை அதிக அளவு இருந்தாலும் அதை சமாளித்து மக்களுக்கும் மகளிர்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் சிலர் சொல்வார்கள். ஆனால் செய்ய மாட்டார்கள் தமிழக முதல்வர் சொல்வது அனைத்தையும் செய்யக் கூடியவர் அவருக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவை தர வேண்டும் ராத்திரியோடு ராத்திரியாக முடிவு செய்து அதிகாலையில் 5000 வழங்கியவர் முதல்வர். இதற்கு முன்பு நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டிருந்தாலும் உங்களுக்கு நல்லது செய்தவர் முதல்வர் காலை உணவு திட்டம் மகளிர்க்கு விடியல் பேருந்து மாணவருக்கு மாதம் 1000 என வழங்கி வந்த முதல்வர். தற்போது மகளிர் உரிமைத்தொகை மூன்று மாதத்திற்கு மொத்தமாக வழங்கி இருக்கிறார். அதை மனதில் வைத்து வரும் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க வேண்டும் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவிலேயே மகளிருக்காக திட்டங்களை அறிவித்து செயல்படுத்த கூடியவர் நமது முதல்வர் பெண்களால் தான் ஒரு குடும்பத்தை கட்டுக்கோப்பாக காப்பாற்ற முடியும் ஆண்களிடம் பணம் சென்றால் என்ன செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியும் சிலர் சொல்வார்கள் ஆனால் செய்ய மாட்டார்கள் சொல்வது ஈசி ஆனால் செய்வது தான் கஷ்டம்.

கை செலவுக்கு கூட பணம் இல்லாத நேரத்தில் திடீரென 5 ஆயிரத்தை வழங்கியுள்ளார் முதல்வர் மூன்று மாதம் கழித்து மாதம் 2000 மகளிர் உரிமை தொகையை வழங்குவதாக கூறியுள்ளார் அதையும் வழங்குவார் ஆகையால் முதல்வருக்கு வாக்களித்து மீண்டும் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் இவ்வாறு பேசினார்.

5000 ரூபாய் யார் வழங்கியது என்ற கேள்விக்கு கலைஞர் கொடுத்தார் கலைஞர் கொடுத்தார் என அங்கு கூடி இருந்த பெண்கள் கூறினார்கள். அவர்களிடம் முதலமைச்சர் கொடுத்தார் என கூற சொன்னார். அமைச்சர் மூர்த்தி நிகழ்ச்சி முடிந்து செல்லும்போது அங்கு கூடியிருந்த பெண்கள் பேருந்துக்காக இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதாக கூறினார்கள். இரண்டு நாட்களில் காலை மாலை என இரண்டு வேளைகளில் பேருந்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.