• Thu. Oct 2nd, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

தலைமை மருத்துவமனைக் கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர்..,

ByPrabhu Sekar

Aug 9, 2025

இந்திய அளவில் பிரதமர் மோடியால் சாதிக்க முடியாததை மற்ற மாநிலத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சர்கள் சாதிக்க முடியாததை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சாதித்துக் கொண்டிருக்கிறேன். இதுதான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வயிற்று எரிச்சளுக்கு காரணம் முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தாம்பரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 110 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக் கட்டிடத்தை திறந்து வைத்தார்,

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1672.52 கோடி மதிப்பில் 20,021 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். இதையடுத்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறுகையில்,

நேற்று தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கப்போகின்ற மாநிலக் கல்விக் கொள்கையை நான் வெளியிட்டேன் உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் முதன்மை கல்வி நிறுவனங்களில் சேர்ந்திருக்கும். நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நான் பாராட்டு தெரிவித்தேன்,

இன்றைக்கு இந்த மாவட்ட மக்களின் உடல்நலனுக்கு உறுதுணையாக இருக்கப்போகின்ற செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை தாம்பரத்தில் திறந்து வைத்தேன்,கல்வியும் மருத்துவமும்தான் நம்முடைய திராவிட மாடல் அரசின் இரு கண்கள் என்று நான் அடிக்கடி சொல்வேன் அதற்கு இந்த நிகழ்ச்சிகளும்தான் எடுத்துக்காட்டு,

20 ஆயிரத்து 21 பேருக்குப் பட்டா வழங்குகின்ற இந்த சிறப்பான விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார் அமைச்சர் விழாவின் அன்பரசன் அவரைப் பொறுத்தவரைக்கும். நான் என்ன சொன்னாலும் அதை தட்டாமல் தவறாமல் உடனடியாக நிறைவேற்றிக் காட்டக்கூடியவர்,

பொதுவாக, நான் ஒரு அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றால் நான் கேட்கும் முதல் கேள்வியே இன்றைக்கு எத்தனைப் பேருக்கு பட்டா வழங்கப் போகிறோம், ஏனென்றால், ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவை என்பது, உண்ண உணவு உடுக்க உடை இருக்க இடம் இதில், உணவும் உடையும் எளிதாக கிடைத்துவிடலாம் ஆனால், இருக்கும் நிலம் எளிதாக கிடைத்துவிடாது ஏனென்றால், நிலம்தான் அதிகாரம் காலுக்கு கீழ் சிறிது நிலமும் – தலைக்கு மேல் ஒரு கூரையும் இன்னும் பலருக்கு கனவுதான் அதனால்தான். பட்டா வழங்குவதில் நான் எப்போதும் தனி கவனம் செலுத்துவேன்,

ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ சமுதாயத்தை கட்டமைக்க சொந்த வீடு இல்லாத நிலமற்ற ஏழைக் குடும்பங்களையும், பெண்களையும் முன்னிலைப்படுத்தி இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் அரசு கொள்கையாக வைத்திருக்கிறது, கலைஞர் கனவு இல்லம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களில் ஏழை மக்கள் பயண் பெருகின்றனர்,

திராவிட மாடல் அரசு செய்த பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் எடுத்த முன்னெடுப்புகளால் அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 2021-லிருந்து, தற்போது வரைக்கும் 17 இலட்சத்து 74 ஆயிரத்து 561 பேருக்கு பட்டா வழங்கியிருக்கிறோம்,

மேலும் சென்னை புறநகர் பகுதிகளிலும் பிற நகர் பகுதிகளிலும் உள்ள புறம்போக்கு நிலங்களில் வாழ மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று அரசாணை வெளியிட்டோம் அதில், 79 ஆயிரத்து 448 தகுதியான பயனாளிகள் கண்டறியப்பட்டு, 63 ஆயிரத்து 419 பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல் அளித்து, 20 ஆயிரத்து 221 பேருக்கு பட்டா வழங்கியிருக்கிறோம். மீதமுள்ள பட்டாக்களை ஒரு மாதத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கபடும்,

தென்குமரியிலிருந்து சென்னை வரைக்கும் சமச்சீரான வளர்ச்சி இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்த்துப் பார்த்து திட்டங்களை நாம் செயல்படுத்துகிறோம் தொழில் நிறுவனங்களை கொண்டு வருகிறோம் வேலைவாய்ப்புகளை உறுதி செய்கிறோம் இதனால்தான் 11.19 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியோடு திராவிட மாடல் ஆட்சியில் இன்றைக்கு தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது,

14 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கலைஞர் ஆட்சிக்குப் பிறகு இப்போதுதான் இந்த இரட்டை இலக்கை நாம் அடைந்திருக்கிறோம். நாட்டிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு வளர்ச்சி இல்லை ஏன், நாட்டின் வளர்ச்சியையும் ஒப்பிட்டு பார்த்தால், நாம் தான் மிஞ்சியிருக்கிறோம் இதுதான் திமுக ஆட்சி, இதுதான் திராவிட மாடல் ஆட்சி, இதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சி,

2011-லிருந்து 2021 வரைக்கும் பத்தாண்டுகாலம் பின்னோக்கிச் சென்ற தமிழ்நாட்டை இந்த நான்கு ஆண்டுகளில் மீட்டெடுத்து வளர்ச்சி பாதையின் உச்சத்திற்கு கொண்டு சேர்த்திருக்கிறோம்,இதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களின் நண்பரான ஒன்றிய அரசு கொடுத்த புள்ளிவிவரத்தையே சரியில்லை என்று பேசுகிறார்

அவருக்கு நான் சொல்லிக்கொள்ள
விரும்புவதெல்லாம் வளர்ச்சியின் அளவீடு பொருளாதார அளவுகோல்தான் இந்த அடிப்படை கூட தெரியாமல், அறிவுஜீவி போல இன்றைக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு என்ன வயிற்று எரிச்சல் என்றால், இந்திய அளவில் பிரதமர் மோடியால் சாதிக்க முடியாததை மற்ற மாநிலத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சர்கள் சாதிக்க முடியாததை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சாதித்துக் கொண்டிருக்கிறேன் இதுதான் அவரின் வயிற்றெரிச்சலுக்குக் காரணம்,

பழனிசாமி அவர்களே நீங்கள் கூட்டணி வைத்திருக்கும் ஒன்றிய அரசால்கூட மறைக்க முடியாத மறுக்க முடியாத அளவிற்கு சாதனைகள் செய்து தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறோம். இதுமட்டுமல்ல, திராவிட மாடல் 2.0-வில் இன்னும் வேகமாக, இன்னும் அதிகமான வளர்ச்சியை ஏற்படுத்துவோம் இந்திய நாடே தமிழ்நாட்டை திரும்பி பார்த்து இதுதான் வளர்ச்சி,இதுதான் வழி என்று சொல்லும் அளவிற்கு நிச்சயமாக செயல்படுவோம் அதை நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்து பார்க்கத்தான் போகிறீர்கள்,

என்னைப் பொறுத்தவரைக்கும் மக்களுக்காக உழைப்பவன் இந்த ஸ்டாலினை மக்கள் நம்பி ஒப்படைத்திருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவோடு எங்கள் பயணம் தொடரும் இவ்வாறு கூறினார்,