• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முதலமைச்சர் அனைத்து பந்துகளிலும் சிக்ஸர் அடிக்கிறார்-ரகுபதி..,

ByS. SRIDHAR

Jan 7, 2026

சென்னையில் நான் நேற்று செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது கூறிய வார்த்தைகள் நீதிமன்ற அவமதிப்பு இல்லை என தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி திருப்பரங்குன்றத்தில் மழை மீது விளக்கு ஏற்றுவதற்கு தூள் உள்ளதா என்பதைத்தான் நாங்கள் கேள்வி எழுப்பினோம் எனவும் அதற்கான வரலாற்றுச் சான்று இருக்கிறதா என்பது தான் திமுகவின் கேள்வி எனவும் இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் இல்லை எனவும் நீதிமன்றத்தை அவமதிக்கும் கருத்து திமுகவுக்கு இல்லை எனவும் எவ்வளவு பெரிய தீர்ப்புகள் வந்தாலும் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலில் ஒருபோதும் திமுக பேய் என்று ஒன்று உள்ளதா அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதா நீதிபதிகள் அரசு பேய் கதை என உதாரணத்தைக் கூறும் பொழுது நான் சுடுகாடு என்று உதாரணத்தை கூறுவதில் என்ன தவறு உள்ளது எனவும் வினவினார் அமைச்சர் ரகுபதி.

ஒரு உதாரணத்தை நான் கூறும் பொழுது அதை தவறாக புரிந்து கொள்வதில் என்ன உள்ளது நீதிமன்றம் பேய் என்ற உதாரணத்தைக் கூறும் பொழுது நாங்கள் ஒரு நபரின் உடலை நடுரோட்டில் எரிக்க வேண்டுமா என கேள்வி வரும்பொழுது பிணத்தை சுடுகாட்டில் தான் இருக்க வேண்டும் என உதாரணம் நாங்கள் கூறும் பொழுது அதில் என்ன தவறு உள்ளது எனவும் நான் பேசிய உரையில் எந்த நாகரிகமற்ற பேச்சும் இல்லை எனவும் நான் ஏதாவது தவறாக பேசினேனா எனவும் செய்தியாளர்களிடமே கேள்வி கேட்டார்.

அமைச்சர் ரகுபதி திமுகவை ஊழல் மிகுந்த கட்சி என அமித்ஷா கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் அவ்வாறு ஆதாரம் இருந்தால் அல்லது ஊழல் நடந்திருந்தால் அந்த நடவடிக்கையை பாரதிய ஜனதா கட்சி அரசு எடுக்க வேண்டியதுதானே எனவும் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து ஊழல் புகார் கூறியிருப்பது வழக்கம் போல் நடைபெறும் நடைமுறைதான் எனவும் எடப்பாடி கூறும் புகார்களுக்கு பொதுமக்களிடம் பொதுக்கூட்டம் கூட்டி விவரத்தை எனவும் தமிழகத்திற்கு அமித்ஷா தொடர்ந்து வருவதால் தமிழகத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை எனவும் அவர்கள் வந்து செல்வதுதான் அவர்களுக்கு வேலையாக அமையும் எனவும் தமிழக அமைச்சர்கள் மீது நீதி மன்றத்தில் உள்ள வழக்குகளை நாங்கள் சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் நெருங்க நெருங்க கிடைக்கும் பந்துகள் அனைத்தையும் சிக்ஸர் அடித்துக் கொண்டிருப்பதாகவும் பிஜேபியும் எடப்பாடியும் ஓவருக்கு எட்டு பந்து போடுவதாகவும் அனைத்து பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பி வருகிறார் தமிழக முதலமைச்சர் எனவும் எங்களுடைய திட்டங்கள் மக்கள் ஆதரவை கண்டு அவர்கள் அஞ்சுவதாகவும் கூறினார்.