• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிப்.23ல் தலைமைத் தேர்தல் ஆணையர் சென்னை வருகை

Byவிஷா

Feb 15, 2024

விரைவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிப்ரவரி 23ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் சென்னை வருகை தருகிறார். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அவர் தமிழகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.
பிப்.24, 25 தேதிகளில் அரசியல் கட்சிகள், காவல்துறை உயரதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். சில தினங்களுக்கு முன் இந்திய தேர்தல் துணை ஆணையர் அஜய் பதூ சென்னையில் 2 நாட்கள் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்னை வருகிறார்.