கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில் திருப்பணிகள் துவங்க பாலாலயம் நிகழ்ச்சியினை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில் கரூர் நகர தான்தோன்றி மலை பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த குடவரை திருக்கோயில் பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலம் ஆகும். கோயிலில் திருப்பணிகள் துவங்க பாலாலயம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் தங்கவேலு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.