
கோதுமையை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்தியாவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களில் ஒன்றான கோதுமையின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக மத்திய உணவு துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்..,
அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை வணிகர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லரை வர்த்தகர்கள் உள்ளிட்டோர் கோதுமையை இருப்பு வைக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 15 ஆண்டுகளில் முதன்முறையாக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது எனவும், அரிசியும் வெளிச்சந்தை விற்பனை திட்டத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
