கோவை நகரில் மக்கள் தொகை அடிப்படையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து உள்ளது ஏற்க முடியாதது என ம.தி.மு.க.பொது செயலாளர் வை.கோ.கோவையில் தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க.சார்பாக அதன் பொது செயலாளர் வை.கோ.தலைமையில் சமத்துவ நடைபயணம் எனும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற உள்ளது.
இதில் கலந்து உள்ளவர்களை தேர்வு செய்வதற்காக அக்கட்சியின் பொது செயலாளர் வை.கோ.கோவை வந்தார்.
காந்திபுரம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,பள்ளி, பள்ளி கல்லூரி மாணவர்களை சீர்கெடுக்கும் மது மற்றும் போதை பொருட்களில் இருந்து தடுப்பதற்கான சமத்துவ நடைப்பயணம் வருகின்ற ஜனவரி 2-ம் தேதி திருச்சி மாநகரில் தொடங்க உள்ளதாக தெரிவித்த அவர், இந்த சமத்துவ நடைபயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.. தொடர்ந்து மதுரையில் முடியும் இந்த நடைப்பயணம் நிறைவு நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, சிபிஐ,சிபிஎம் மற்றும் விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள். என தெரிவித்தார்.

கோவை,மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை கடிமையான விமர்சித்த அவர், மக்கள் தொகை அடிப்படையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து உள்ளது ஏற்க முடியாதது என விமர்சித்தார்.







; ?>)
; ?>)
; ?>)