• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மருத்துவமனைக்கு வந்த கார் திடீரென தீ விபத்து..,

ByKalamegam Viswanathan

Apr 28, 2025

மதுரை மாவட்டம் வேடர் புளியங்குளம் V.P சித்தன் நகர் பகுதியை சேர்ந்த சுந்தர மூர்த்தி என்பவரின் மகள் ஸ்விப்ட் காரை ஒட்டி வந்துள்ளார்.
திருநகர் 2வது நிறுத்தத்தில் காரை நிறுத்தி சுந்தர மூர்த்தி மருத்துவமனைக்குள் சென்றுள்ளார்.

கார் என்ஜினில் இருந்து புகை வருவதை கண்ட பெண் உடனடியாக காரில் நிறுத்தி இறங்கி அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அப்போது திடீரென கார்த்தி பற்றி அறிந்ததில் காரின் முன்புறம் முற்றிலும் சேதம் அடைந்தது. இதனையடுத்து திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நிலையை அலுவலர் உதயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அருகில் தீப்பற்றி பெரும் விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டது. விபத்து குறித்து திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.