• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மிளகாய் மாலை அணிந்து பிச்சை ஏந்தும் பாத்திரத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்…

BySeenu

Mar 26, 2024

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த நூர் முகமது என்ற சுயேட்சை வேட்பாளர் இன்று கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த அவர் கழுத்தில் மிளகாய் மாலை அணிந்தும் கழுத்தில் மிளகாய்களை கட்டி கொண்டும் கையில் பிச்சை பாத்திரம் ஏந்திய படியும் தண்டோரா போட்டுக் கொண்டு வந்தார். 100 மீட்டருக்கு முன்பு அவரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் தேர்தல் விதிமுறையின் படி மிளாகாய் மாலையை கழட்டி விட்டு வேட்புமனு தாக்கல் செய்ய வருமாறு அறிவுறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஓட்டுக்கு பணம் வாங்கினால் மக்களை அடிமையாக்கி தலையில் மிளகாய் அரைத்து பிச்சை கேட்க விட்டுவிடுவார்கள் என்று கூறி இதுபோன்று மிளகாய் மாலை அணிந்து கையில் பிச்சை பாத்திரத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இவர் இதற்கு முன்னதாக பொள்ளாச்சி தொகுதிக்கு வேட்பாளர் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.