மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் – அமமுக பொதுச் செயலாளரும் தேனி பாராளுமன்ற வேட்பாளருமான டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு வந்தடைந்தார்.
தொடர்ந்து இந்த கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன்..,
அமமுக துரோகத்தை எதிர்த்து உருவாக்கிய களம், அதிமுக உருவனது துரோகத்தால் தான். ஆட்சி ஆட்டம் கண்ட போது அவர்களை பாதுகாத்தவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். ஒபிஎஸ்-க்கும் துரோகம், டெல்லியில் உள்ளவர்களுக்கும் துரோகம் செய்துவிட்டனர்.
பலன்கள் எல்லாம் வேண்டாம் என பல பேர் எங்களோடு இந்த இயக்கத்தில் இணைந்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். நான் கூட உசிலம்பட்டியில் நின்றிருந்தால் உசிலம்பட்டியில் எம்எல்ஏவாக இருந்திருப்பேன். இன்று வந்துவிட்டேன் வேட்பாளராக.
நம்மிடமிருந்து போன தூண் தான் திமுகவின் வேட்பாளர். நம்மிடமிருந்து உயர் பதவியில் இருந்தவர்கள் எல்லாம் போய்விட்டனர். நல்லா இருக்கட்டும்., எல்லோரும் வருவார்கள். திமுகவை விட யாரும் நமக்கு எதிரி இல்லை.,
இந்த தேனி மக்கள் பாசத்தோடும் அன்போடும் உள்ளனர். இதை எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்கிட முடியாது.
அம்மா இப்போது இல்லை அம்மாவின் இடத்தில் பாரத பிரதமர் மோடி உள்ளார். மூன்றாவது முறையாக பிரதமர் ஆக போவது அவர் தான். அனைத்து தேவைகளையும் மோடியிடம் கேட்டு செய்வேன். உசிலம்பட்டி, சோழவந்தான் மக்களிடம் எதைக் காட்டியும் ஏமாற்ற முடியாது என பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்.,
நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறேன். செயல்வீரர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். என்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று மக்கள் அமைத்த வியூகம் தான். நான் தேர்தல் வியூகம் அமைக்கவில்லை.,
எங்களது பணி வெற்றி கனியை பறிப்பது மட்டுமே யார் யாரோ பேசுவதற்கு நான் பதில் சொல்லி உங்கள் நேரத்தையும், என் நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை என பேட்டியளித்தார்.