• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை அருகே ஜல்லிக்கட்டு காளையையும் புகுந்த வீட்டிற்கு அழைத்துச் சென்ற மணமகள்

ByKalamegam Viswanathan

May 24, 2023

மதுரை நாகமலைபுதுக்கோட்டைக்கு திருமணம் முடிந்த கையோடு “சீராக” தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையையும் புகுந்த வீட்டிற்கு அழைத்துச் சென்ற மணமகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யங்கோட்டையைச் சேர்ந்த மணமகள் சிவப்பிரியா என்பவருக்கும், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த மணமகன் ராஜபாண்டிக்கும் நேற்று 22.05.2023 நேற்று மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் குடும்பத்தினர் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.,


இந்த திருமண விழாவின் திருமண நாயகியான மணமகள் சிவப்பிரியா பொதுப்பணித்துறையில் பணியாற்றி வருவதோடு, தமிழர் பாரம்பரியம் மாறாமல் ஜல்லிக்கட்டு காளையையும் வளர்த்து வந்துள்ளார்.
நேற்று திருமணம் முடிந்த கையோடு திருமண சீர்ருடன் தான் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளையையும் மணமகள் சிவப்பிரியா புகுந்த வீட்டிற்கு அழைத்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,
முன்னதாக ஜல்லிக்கட்டு காளையை மணமேடையில் ஏற்றி மணமகனுக்கு அறிமுகம் செய்தனர்., தொடர்ந்து மணமகனும், மணமகளும் ஜல்லிக்கட்டு காளைக்கு முத்தமிட்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.,
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் சமீபத்தில் வெற்றி கிடைத்துள்ள சூழலில் பாரம்பரியம் மாறாது தான் வளர்த்த காளையை புகுந்த வீட்டிற்கு மணமகள் அழைத்துச் சென்றது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.