• Mon. May 29th, 2023

ஐடிஐ பயிற்சியாளர் சேர்க்கை..,இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்…!

Byவிஷா

May 24, 2023

தமிழகத்தில் ஐடிஐ பயிற்சியாளர் சேர்க்கைக்கு இன்று முதல் ஜூன் 7ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் தமிழகத்தில் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகிறது. இதில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது. 8ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் மே 24ஆம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *