• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பேஸ்புக்கில் லைக் வராததால் இருநாட்டு அதிகாரிகளை அலறவிட்ட சிறுவன்..!

Byவிஷா

May 1, 2023

உலகம் முழுவதும் செல்போன் மோகம் அதிகரித்து வரும் நிலையில், பேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு இந்தியா – அமெரிக்கா என இருநாட்டு அதிகாரிகளையும் ஒரு சிறுவன் அலறவிட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவிலிருந்து சமூக வலைதளமான பேஸ்புக் லைவ் மூலம் நள்ளிரவில் பேசிய பத்தாம் வகுப்பு சிறுவன் பேஸ்புக் லைவிலேயே கொசு மருந்து குடித்துள்ளான். இந்த சம்பவத்தை கண்காணித்த பேஸ்புக் அதிகாரிகள் அமெரிக்க தலைமையகத்தில் இருந்து இந்தியாவிற்கு தகவல் அனுப்பினர். இதைத்தொடர்ந்து இந்திய அதிகாரிகள் உத்திரப்பிரதேச காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
பேஸ்புக்கில் காட்டிய லொகேஷனை வைத்து விரைவாக சென்ற காவல்துறையினர் சிறுவனை மீட்க முடியவில்லை. காரணம் அந்த லொகேஷனில் 50க்கும் மேற்பட்ட மொபைல்கள் செயல்பட்டு வந்தது. அந்த அவசர சூழ்நிலையில் வேறு வழியை அறியாத காவல்துறையினர் ஒவ்வொரு வீடாக கதவை தட்டி சிறுவனை தேடி உள்ளனர். இறுதியாக சிறுவனை கண்டறிந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு விசாரணையில் பேஸ்புக் லைக்கிற்காக அவ்வாறு செய்ததாகவும் ஆனால் வெறும் கொசு மருந்து பாட்டில் தண்ணீர் ஊற்றி கொசு மருந்து போல் குடித்ததாக லைவ்வில் காட்டியதாக அவர் கூறியுள்ளார். இதனை அறிந்து அதிர்ந்து போன காவல் துறையினர் சிறுவனுக்கு அறிவுரை வழங்கி மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கினர்.