• Fri. Dec 26th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புத்தகத் திருவிழாவினை ஊரக வளர்ச்சி அமைச்சர் ஐ. பெரியசாமி தொடங்கி வைத்தார்.

ByMuruganantham. p

Mar 23, 2025

தமிழகத்தில் கல்விக்காக 47 ஆயிரம் கோடி ஒதுக்கிய ஒரே முதல்வர் மு.க ஸ்டாலின் தான் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.

தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்றாம் ஆண்டு புத்தக கண்காட்சி நிகழ்ச்சி இன்று தொடங்கி நடைபெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து புத்தக கண்காட்சியில் இடம்பெற்று இருந்த புத்தகங்களை பார்வையிட்டு சிறிது நேரம் புத்தகத்தை வாசித்தார்.

பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி,

தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கல்விக்காக 47 ஆயிரம் கோடி ஒதுக்கிய ஒரே முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தான் என்று பேசினார்.

இந்த புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கி 30 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது, சுமார் 60க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு குழந்தைகள், பெரியவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் வரலாறு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் இந்த புத்தக கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

மேலும் இந்த புத்தக கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.