• Fri. Apr 19th, 2024

முன்னாள் போப்பாண்டவர் உடல் இன்று அடக்கம்

ByA.Tamilselvan

Jan 5, 2023

அஞ்சலிக்காக வைக்கப்பட்ட முன்னாள் போப்பாண்டவர் 16-ம் பெனடிக்டின் இறுதி சடங்குகள் வாடிகன் தேவாலயத்தில் இன்று நடக்கிறது
உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப்பாண்டவர் 16-ம் பெனடிக்ட் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 31-ந்தேதி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95. அவரது உடல் வாடிகன் அரண்மனையில் பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சென்று அஞ்சலி செலுத்தினர். 5 நாட்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போப்பாண்டவர் 16-ம் பெனடிக்டின் இறுதி சடங்குகள் வாடிகன் தேவாலயத்தில் இன்று நடக்கிறது. அடக்க திருப்பலிக்கு பின்னர் அவரது உடல், சைப்ரஸ் மர பெட்டிக்குள் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து பாதிரியார்கள், ஆயர்கள், கர்தினால்கள் கலந்து கொள்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *