• Tue. Sep 17th, 2024

கர்நாடகத்தில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று

ByA.Tamilselvan

Jan 5, 2023

கர்நாடகத்தில் மிகவேகமாக பரவும் எக்ஸ்.பிபி. 1.5 வகையை சேர்ந்த கொரோனா தொற்று ஒருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் நேற்று 13 ஆயிரத்து 201 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் ஒன்றுக்கும் கீழ் உள்ளது. சீனா, அமெரிக்காவில் வேகமாக பரவும் ‘பி.எப்.-7’ என்ற புதிய வகை கொரோனா இந்தியாவிலும் பரவியுள்ளது. அதாவது குஜராத், ராஜஸ்தானில் அந்த புதிய வகை வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்திலும் ஒருவருக்கு இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அது ‘எக்ஸ்.பி.பி.1.5’ வகையை சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கர்நாடகத்தில் தீவிரமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி விடுமா? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *