• Thu. May 2nd, 2024

100 கோடி தடுப்பூசி செலுத்தியதை நூறு என்ற இலக்க வடிவில் நின்றவாறு நன்றி செலுத்திய பா.ஜ.க-வினர்…

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு மக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ‌ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட கொரோணா தடுப்பூசி செலுத்தும் பணி ஒன்பது மாதங்களில் 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை அடைந்துள்ளது.

குறிப்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளன்று இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
தற்போது இந்தியா நேற்று 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளது.

இதனை வரவேற்கும் வகையில் தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய நூறு பேர் இணைந்து 100 என்ற இலக்க வடிவில் நின்று தங்களது நன்றியை தெரிவித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் இந்த மாபெரும் சாதனையை சாத்தியமாக்கிய முன்கள பணியாளர்களான செவிலியர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கும் உள்நாட்டிலேயே தடுப்பூசி தயார் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி கொரோணா தடுப்பு நடவடிக்கைகளில் உலகிற்கு முன்னுதாரணமாக முனைப்புடன் செயல்பட்டு வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர்கள் தங்களுடைய பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *