வைகை அணை நீர்த்தேக்கத்தில் தண்ணீரும் ,வானமும் ஒன்று போல் காட்சி அளிக்கிறது. மிகவும் ரம்மியமான சூழ்நிலையில் வைகை அணையில் வானம் மப்பும், மந்தாரமுமாக கொடைக்கானலை விஞ்சி நிற்கிறது.

இதமான காற்று, இனிமையான துளிர் மழை,இது இன்று மதியம் ஒரு மணி நிலவரம். இரவுக்குள் அணை முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விட்டு விட்டு பெய்யும் இதமான சாரல் மழையில், பூங்காக்களில் காதல் ஜோடிகளும், புதுமண தம்பதிகளும் தங்களை மறந்து உலா வரும் காட்சி ஏதோ வானத்தின் மந்தார பகுதிகளில் இந்திரன் வர்ணஜாலம் காட்டி உலா வருவதை நினைவூட்டுகிறது.
